பொதுமக்களுக்கு இடியாக வந்த செய்தி…கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட வாய்ப்பில்லை..!! கைவிரித்த பிரபல மருத்துவர்..!

கோவிட் -19 என்ற கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும் ஊசி மருந்தை கண்டுபிடிக்கப்பட வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பின் கோவிட் -19 தொடர்பான விசேட பிரதிநிதி மருத்துவர் டேவிட் நெப்ரோ தெரிவித்துள்ளார்.

நூறுக்கும் மேற்பட்ட மருந்துக்கள் ஆய்வு மட்டத்தில் இருப்பதுடன் இரண்டு மருந்துகள் மனிதர்களை பயன்படுத்தி பரிசோதித்த பின்னர், சுகாதார அமைப்பின் கோவிட்-19 தொடர்பான விசேட பிரதிநிதி வெளியிட்டுள்ள இந்த கருத்து குறித்து முழு உலகமும் கவனம் செலுத்தி வருகிறது.எச்.ஐ.வி. மற்றும் டெங்கு நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் பரிசோதனைகளும் இதுவரை வெற்றி பெறவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றிய 32 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.ஒரு வைரஸின் ஆபத்து இதுதான் எனக் கூறியுள்ள மருத்துவர் டேவிட் நெப்ரோ, கொரோனா வைரஸூக்காக மருந்து தொடர்பாக எப்படியான எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தாலும், இறுதியில் அவை அனைத்து சிதைந்து போக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.