கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு இலவசமாக சவப்பெட்டிகள்

அத்தனகல்ல பிரதேச சபை இலவசமாக சவப் பெட்டிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு இலவசமாக சவப்பெட்டிகள் வழங்குவதாக அத்தனகல்ல பிரதேச சபையின் தலைவர் பிரியந்த புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் காரணமாக உயிரிழப்போரின் குடும்ப உறுப்பினர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுவோருக்கு உதவும் நோக்கில் சவப்பெட்டிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

குறிப்பாக குறைந்த வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால் அந்த குடும்பத்தினால் சவப்பெட்டி ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் கோவிட் – 19 காரணமாக மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்ய சவப்பெட்டிகளை இலவசமாக வழங்கவும், இறுதிக் கிரியைகளுக்கு கட்டணம் அறவீடு செய்யாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொடையாளர்கள் சிலர் பலகைகளை வழங்கி வரும் நிலையில் பிரதேச சபையின் பணியாளர்கள் சவப்பெட்டிகளை தயாரித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.