உடுகம பிரதேசத்தில் காதலியை கடத்த முயன்ற காதலனால் பரபரப்பு!

உடுகம பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் தனது காதலியை கடத்தி செல்வதற்காக வந்த இளைஞன் காதலியின் பையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இவ்வாறான செயலில் ஈடுபட்ட காதலன் மற்றும் அவரது நண்பனை உடுகம பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆ

டை தொழிற்சாலையின் ஊழியரான சுதுவெலிபொத்த பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உடுகம, உக்ஓவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய சாரதி ஒருவருடன் காதல் தொடர்பை ஆரம்பித்துள்ளார். எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது காதல் தொடர்பை நிறுத்திக் கொண்டமையினால் இளைஞன் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இதனால் 21ஆம் திகதி அவர் தொழிலுக்கு சென்றுக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த சந்தேக நபரான காதன் அவரை கடத்தி செல்ல முயற்சித்த போதிலும் அது முடியாமல் போயுள்ளது. இதனால் அவரது பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம் பெண் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்தவுடன் அச்சத்தில் இந்த பையை நண்பர்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பையை கொண்டு வந்த நண்பர்கள் ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.