அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் தீ மூட்டித் தற்கொலை!

அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் தீ மூட்டித் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் திருகோணமலையை சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளகளின் தந்தை ஒருவரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். உள்நாட்டு போர் காரணமாக அவர் சிறு குழந்தையாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது.

அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரினார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் உள்ள Sunshine என்ற இடத்தில் வசித்து வந்த குறித்த நபர் தன்னைத் தானே தீ மூட்டித் தற்கொலை கொண்டதாக கூறப்படுகின்றது.