யாழில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா தொற்று !

யாழில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.


யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 737 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய யாழ். மாவட்டத்தில் 102 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 05 பேருக்கும், கிளிநொச்சி – இரணைமடு விமானப்படை முகாமில் 07 பேருக்கும், மன்னார் கடற்படை முகாமில் 02 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.