திருகோணமலை மாவட்டத்தில் 24 மணித்தியாலத்தில் 08 பேர் பலி!

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 08 பேர் மரணித்துள்ள நிலையில் 143 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (22) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 78 ஆண்களும்,65 பெண்களும் அடங்குவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 2021-08-21ம் திகதி வரை 7707 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 119 பேர் கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 202 பேர் இதுவரை மரணித்துள்ளதாகவும், தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனைகள் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விடயத்துக்குப் பொறுப்பான வைத்திய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.