2000 ரூபா கோவிட் நிவாரணம் பெற தகுதியுடையோர் விபரங்கள் !

கோவிட் தொற்று தீவிரமடைந்துள்ளமையால் நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 2000 ரூபா கோவிட் நிவாரணம் பெற தகுதியுடையோர் விபரம் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை இன்றைய தினம் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான செயலணி வெளியிட்டுள்ளது.

எந்தவிதமான கொடுப்பனவுகளும் பெற்றுக்கொள்ளாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மாத்திரமே இந்த 2000 ரூபா கொடுப்பனவை பெற தகுதியுடையவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின் படி நாளை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.