யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா தொற்று!

யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வு யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில் அண்மையில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது.

ஒன்றுகூடல்களிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின்னர், அதை மீறி அதிகளவானவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 58 பேருக்கு அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 21 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.