தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

60 வயதுக்கு மேற்பட்டோர் முடியுமானவரை விரைவாக, தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்துக்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பார் நாயகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களில் 70 முதல் 80 சதவீதமானோர் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.