இலங்கையில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா மரணங்கள்!

இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 195 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,790 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 381,812 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 320,810 ஆக அதிகரித்துள்ளது.