மெல்ல மெல்ல குறைவது போலக் குறைந்து திடீரென எகிறிய கொரோனா.!! லண்டனில் நேற்று மட்டும் 693 பேர் பலி..!!

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பிரிட்டனில் இறந்தவர்களின் எண்ணிக்கை, சற்று குறையத் தொடங்கியது போல இருந்தது. அது போக நேற்று முந்தினம் தினம்(04) மிக மிகக் குறைவான சாவு எண்ணிக்கை வெளியாகி இருந்தது. இதனால், மக்கள் மகிழ்சியில் இருந்தார்கள். ஆனால், நேற்றைய தினம்(05). அனைவரையும் அதிர்சிக்கு உள்ளாக்கும் வகையில், 693 மரணங்கள் நிகழ்ந்துள்ளதோடு, தொற்றானது 4,400 பேருக்கு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இதனால், பிரிட்டனில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 29,427 என பதிவாகியுள்ள நிலையில். பிரிட்டனில் 40,000 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும். ஆனால் அரசு இதனை வேண்டும் என்றே தாமதமாக அறிவித்து வருவதாகவும் பல ஆங்கில ஊடகங்கள் சாடியுள்ளார்கள்.ஐரோப்பிய நாடுகளிலேயே பிரித்தானியா தான் அதிக சாவு எண்ணிக்கை கொண்ட நாடாக இருப்பதாகவும் குறித்த ஆங்கில இணையங்கள் குற்றம் சாட்டியுள்ளது.பிரித்தானிய அரசு, இறந்தவர்களின் எண்ணிகையிலும், தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும், பல சுத்துமாத்துகளை செய்து வருவதாக தொடர்சியாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.