அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த நாட்டில் ஏனைய அனைத்து விடயங்களும் முடக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றிக் கொண்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த நாட்டில் ஏனைய அனைத்து விடயங்களும் முடக்கப்படும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

குறித்த முடக்கமானது எப்போது வரையில் அமுலில் இருக்கும் என்பது தொடர்பில் இன்று இரவு தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் கோவிட் தொற்று நிலைமை தொடர்பிலான கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டம் முடிந்து சற்று நேரத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.