உங்கள் கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் என்று வாங்க பார்க்கலாம்?

பொதுவாக கனவு என்பது நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை கொண்டு வருவது தான் கனவு. அந்த வரிசையில் ஆன்மீக கனவுகளுக்கு என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம்.

அதிலும் தூக்கம் கலைந்த பிறகு நாம் கண்ட கனவிற்கு என்ன பலன் என்று யோசித்து கொண்டே இ௫ப்போம். பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இருக்கும் போது ஒரு கனவு வந்தால் அது வருங்காலத்தில் ஒரு நல்லது நடக்கப்போவதையே கனவில் குறிக்கிறது.

அந்த வரிசையில் ஆன்மீக கனவுகளுக்கு என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம். நம் கனவில் சிவன் வந்தால் நம் தொடர்ச்சியான தியான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றாகும்.

முருகன் வந்தால் நாம் நினைத்த காரியம் கைகூடும் என்றாகும். விநாயகர் வந்தால் நாம் புதிதாக தொடங்கும் வேலையில் நல்லனவையே நடக்கும் என்றாகும். பெருமாள் வந்தால் புதிதாக தொடங்கும் தொழில் நன்கு வளரும் என்றாகும்.

விஷ்ணு பகவான் வந்தால் நாம் செல்வந்தர் ஆகுவோம் என்றாகும்.

அம்பாள் கனவில் வந்தால் வீட்டில் நல்ல சுப காரியங்கள் நிகழும். மேலும் குலதெய்வம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மேலும் நல்ல சுபிட்சம் வ௫வதை குறிக்கும்.

யானை துரத்துவது போல கனவு கண்டால் விநாயக௫க்கு ஏதோ நீங்கள் செய்ய வேண்டியது பாக்கி உள்ளது என அர்த்தம். கோவில் கோபுரம் வந்தால் பூர்வ ஜென்ம பாவம் நீங்கி விட்டது போலவும் நல்ல நிலைக்கு செல்ல போகிறீர்கள் என்றும் அர்த்தமாகும். கடவுள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் வாழ்க்கையில் குறை இன்றி, நல்லது உண்டாகும் என்பதாகும்.

எனவே, ஆன்மீக கனவு என்பது பெரும்பாலும் ஒரு வகை நல்லதை குறிப்பதற்காகவே என்று அர்த்தம் ஆகும்.