நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வெளியான தகவல்களை அடுத்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

எனினும், நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு எதுவும் கிடையாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது குறித்து தாமே மக்களுக்கு முதலில் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் மக்களுக்கு நேர்மையாக இருப்பதாகவும், எரிபொருள் விலை உயர்வு குறித்து கூட தாம் முன்கூட்டியே அறிவித்ததாகத் தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி நெருக்கடி நிலைமை குறித்தும் தாமே முதலில் நாட்டு மக்களுக்கு அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.