நாளை முதல் இரண்டு வாரகாலத்திற்கு மக்களுக்கு விசேட நிவாரணம்

நாளை முதல் இரண்டு வாரகாலத்திற்கு மக்களுக்கு விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

2600 ரூபா பெறுமதியான 20 பொருட்கள் குறித்த நிவாரணப் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

1998 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக இந்த நிவாரணப் பொதியை மக்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியாக அனைத்து சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக குறித்த நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர்   மேலும் தெரிவித்தார்.