கிணற்றில் விழுந்திருந்த நாய் ஒன்றை காப்பாற்ற முற்பட்ட நபர் பரிதாபமாக பலி!

தெல்கொட, மீகஹவத்தை பிரதேசத்தில் கிணற்றில் விழுந்திருந்த நாய் ஒன்றை காப்பாற்ற முற்பட்ட நபர் ஒருவர் குறித்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நாய் கிணற்றில் விழுந்ததை அறிந்த குறித்த நபர் நேற்று மாலை 6 மணி அளவில் கயிறு ஒன்றின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.

பின்னர் நாயுடன் மேலே வந்துக் கொண்டிருந்த போது கயிறு அறுந்ததில் குறித்த நபர் சுமார் 30 அடி ஆழமான கிணற்றில் விழுந்துள்ளார்.

உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த நாய் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.