ஆபத்தான பிரதேசமாக மாற்றம் பெறும் கொழும்பு மாநகரம்.!!களத்தில் இறங்கிய புலனாய்வுத் துறை..!!

கொழும்பில் நேற்று அடையாளம் காணப்பட்ட 4 கொரோனா நோயாளிகளினால் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு நோயாளிகளுக்கும் கொரோனா தொற்றிய முறை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட புலனாய்வு பிரிவினர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.இன்றைய தினம் இரவிற்குள் குறித்த நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.நேற்றைய தினம் குறித்த கொரோனா நோயாளிகள் கொழும்பின் 4 இடங்களில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டனர்.கொழும்பின் மோதர, ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர, கொலன்னாவ – சாலமுல்ல மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்த நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதனை தொடர்ந்து கொழும்பின் பல பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.