இலங்கையில் முதன்முறையாக இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட விறகுகள்

இலங்கையின் முன்னணி இணையத்தள விற்பனையாளர்கள் முதன்முதலில் விறகு மூட்டைகளை இணையத்தில் விற்றதாகவும், 1000க்கும் மேற்பட்ட விறகு மூட்டைகளை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய நாட்களில் நாட்டில் எரிவாயுவிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியதுடன், மக்கள் பழைய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த இணைய விற்பனை தளத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் விறகுகளை இணையத்தில் விற்பனை செய்வோம் என்று கற்பனை செய்து பார்த்ததில்லை.

ஆனால் அது மிக வேகமாக விற்கப்படுகிறது, ”என்று கூறினார். இணையதளத்தில், 5 கிலோ இலவங்கப்பட்டை விறகு ஒரு மூட்டை ரூ. 140, களிமண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் 5 கிலோ விறகு மூட்டை என்பவற்றிற்கு சலுகை விலையாக ரூ. 390 வழங்கப்படுகின்றது.

மேலும், குறித்த விறகு கையிருப்பு 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.