இந்த ராசிக்காரர்களோடு சற்று கவனமாக இருங்கள் இல்லையெனில் ஏமாந்துபோய்விடுவீர்கள்!

ஜோதிடப்படி சில ராசியினர் தங்கள் காரியத்தில் கண்ணாக இருப்பதோடு, சுயநல எண்ணங்களை மனதில் கொண்டு செயல்படுபவர்கள், மற்றவரின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளுடன் விளையாடக்கூடியவர்கள்.

அப்படிப்பட்ட ஏமாற்றக்கூடிய ராசியினர் என்ன என்பதை பார்ப்போம்.

மிதுனம்

மிதுன ராசியினர் அவர்களின் வேலை ஆக பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றக்கூடியவர்கள்.

அதை ஒப்புக்கொள்வதில் அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை, எப்படியாவது தங்கள் பொய்களை நியாயப்படுத்தும் திறனும் உள்ளவர்கள். தவறான வாக்குறுதிகளை வழங்குவதிலும் எப்படியும் காரியம் சாதிக்கக்கூடியவர்கள்.

கடகம்

இவர்களின் செயலை செய்து முடிக்க, அவர்கள் கஷ்டப்படுவதைப் போல காட்டிக் கொள்வார்கள். இவர்களுக்காக நீங்கள் வருத்தப்படுபவர்களாக மாற்றி வேலையை செய்து முடிப்பர். இறுதியில் தான் அவர்களின் மோசமான செயல் நமக்கு தெரியும்.

​கன்னி

கன்னி ராசியினர் வெளிப்படையாக கெட்டவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்களின் தீய திட்டத்தை மற்றவர்களை விரும்பி வந்து செய்ய வைக்கும் ஆற்றல் மிக்கவர்கள். அவர்கள் உங்களை கையாளும் விதம் ஆச்சரியம் தரும். சிலர் ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

துலாம்

யாரும் குறை சொல்லாத அளவிற்கு மற்றவர்கள் முன் அப்பாவியாகச் செயல்படுவார்கள். அவர்கள் தூய்மையான ஆத்மாக்களைப் போல நடந்து கொள்வார்கள், அவர்களுக்காக தங்கள் வேலையைச் செய்ய உங்களை ஏமாற்றுவார்கள்.

விருச்சிகம்

மக்களின் தனிப்பட்ட ரகசியங்களை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் பழக்கம் விருச்சிகம் ராசிக்கு உண்டு. அவர்கள் உங்களை அச்சுறுத்துவார்கள், அடிப்படையில் உங்களை கொடுமைப்படுத்துவார்கள்.

இவர்களுடன் உங்களின் தனிப்பட்ட ரகசியங்கள் மற்றும் ஆழமான அன்பை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.-