கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு வீட்டில் நடந்த சோகம்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி ஒருவரின் உடலில் வெந்நீர் ஊற்றப்பட்டதன் காரணமாக ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்து வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் இன்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்னர் சிறுமி மற்றும் அவரது தாயார் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களின்படி வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்த நிலையில், இன்றையதினம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி பின்னர் சிகிச்சைக்காக கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.