வைத்தியசாலை பிணவறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் குவியும் சடலங்கள்

கம்பஹா மாவட்டத்தின் வத்துப்பிடிவல ஆதார வைத்தியசாலையின் பிணவறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக வீதிகளில் சடலங்கள் பாதுகாப்பற்ற முறையில் குவிந்து காணப்படும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கோவிட் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில்,பல வைத்தியசாலைகளில் இவ்வாறு இடப்பற்றாக்குறை,ஒட்சிசன் வாயு தட்டுப்பாடு, பிணவறைகளில் இடநெருக்கடி போன்ற பல புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இது குறித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் ஊடகப்பிரிவு தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளது.

புகைப்படங்களை பதிவிடுவதற்கு மன்னியுங்கள்! வத்துப்பிடிவல ஆதார வைத்தியசாலையின் பிணவறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக வீதிகளில் சடலங்கள் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில்! அதிகாரிகள் கண்காணியுங்கள் என்றும் பதிவொன்றினையும் பகிர்ந்துள்ளது.