இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்டக்காரனான குசல் ஜனித் பெரேராவுக்கு கோவிட் தொற்று

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தென்னாபிரிக்கா அணியுடனான போட்டித் தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.