இன்று முதல் இரவு பத்து மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்கு

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணி முதல் அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக நேற்றைய தினம் இராணுவத் தளபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரவு நேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

ஊடகமொன்றின் நிகழச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாக இரவு நேரத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.