உலகமே பார்த்து வியக்கும் அதிசயம் !தமிழனின் மறைக்கப்பட்ட வரலாறு

உலகிலேயே மிகப்பெரிய அசைக்கமுடியாக கோயில் என்றால் அது கம்போடியா நாட்டிலுள்ள அங்கோரியன் எனும் இடத்தில் தமிழ் வழியில் வந்த அங்கோர்வாட் எனும் கோயிலாகும். இது இன்றைக்கு இருக்கும் அறிவியல் விஞ்ஞானம் கூட கண்டுவியக்கும் மிக பிரம்மாண்ட படைப்பு இது கூறலாம். சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இக்கோயிலை ஒரு கலைப் பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோயிலை சுற்றி மிகப்பெரிய அகலி மற்றும் பிரம்மாண்டமான மதில் சுவர், உயர்ந்து நிற்கும் கோபுரங்கள், திரும்பிய திசையெல்லாம் சிற்பங்கள் என அங்கோர்வாட் ஒரு உலக அதிசயமாகவே காட்சியளிக்கின்றது. இந்த கோயிலின் ஒரு பக்க சுற்றுச்சுவரே சுமார் 3.6 கிலோமீற்றர்களாகும். தற்போதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள எந்தவொரு தொழில்நுட்பம் வாய்ந்த கமெராவிலும் கூட இன்றுவரை இதன் முழு கட்டிடத்தையும் படம்பிடிக்க முடியவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. இந்த கோயிலை முழுமையாக படம் பிடிக்க வேண்டுமென்றால் பூமியிலிருந்து சுமார் 1000 அடிக்கு மேலே வானத்திலிருந்து படம் பிடித்தால் மாத்திரே முடியும்.

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற கட்டிடத்தை கட்டினால் சுமார் 300 ஆண்டுகள் வரை ஆகும் என பொறியியலாளர்கள் கூறுகின்றனர். அப்படி இருக்க எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 27 ஆண்டுகள் இக்கட்டிடம் கட்டப்பட்டது என்பது ஆச்சரியத்தை தருகின்றது.

இக்கோயில் தமிழ் வழிமரபில் வந்த இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113–1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் ஸ்ரீ போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது.

இக்கோயிலை மேலே இருந்து பார்க்கும் போது மூன்று அடுக்குகளாக காட்சியளிக்கின்றது. முதல் அடுக்கில் உள்ள சுவரில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர அடியில் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள 5 கோபுரங்களாக காட்சியளிக்கின்றன. இப்பேர்ப்பட்ட உலகில் மிகப்பிரம்மாண்டமான கலை வடிவம் கொண்ட இக்கட்டிடம் தமிழ்வழிமரபில் வந்து தற்போது கம்போடியாவில் புத்த ஆலயமாக மாறியுள்ளது. இக்கோயில் தமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயமாக காணப்படுகின்றது.