ஆபத்தின் விளிம்பில் இலங்கை தாதி ஒருவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சறுத்தலின் ஆபத்தை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி புஷ்பா ரம்யா டி சொய்ஸத சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் நேற்று அவர் வெளியிட்ட பதிவில்,கொரோனா காரணமாக இன்று (நேற்று) எங்களை விட்டு பிரிந்தவர்களின் எண்ணிக்கை 160. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். அத்தோடு நாளை நாங்கள் நேசித்தவர்களில் இந்த எண்ணிக்கை விடவும் அதிகமானோர் எங்களை விட்டு பிரியவுள்ளனர்.

மேலும் இந்த நாட்களில் தினமும் எனது தனிப்பட்ட கைடக்க தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகளில் “புஷ்பா எங்கள் குடும்பத்திற்கே கொரோனா. என்ன செய்வது?” என்பதே நான் கேட்கும் ஒரே விடயமாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாங்கள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றோம். மேலும் வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளது. பிணவறைகள் நிரம்பியுள்ளது.

எங்கள் மூத்த தலைமுறையினர் வேகமாக மரணிக்கின்றனர். அத்தோடு இதய நோய், சக்கரை நோய், பக்கவாதம், சுவாச மற்றும் நுரையீரல் நோய்களில் உள்ளவர்கள் மிகவும் அவதானமிக்க நிலைமையில் உள்ளனர்.

மேலும் உடல் பருமன் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கும் அதிக ஆபத்து உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். இது தீர்மானிமிக்க சந்தர்ப்பம். நீங்கள் மாறினால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும்.

உங்கள் நோய்களுக்கு சரியான சிகிச்சை பெறுங்கள். தரமான உணவை உண்ணுங்கள். தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழுங்கள். நன்றாக தூங்கி ஓய்வெடுங்கள்.
மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். மது, புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை தவிர்க்கவும். அனைத்து நல்ல ஆரோக்கியப் பழக்கங்களையும் பின்பற்றுங்கள்
மேலும் நாட்டை உருவாக்கும் முன் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இது நாம் கழிக்கும் நம் வாழ்வின் கடைசி காலப்பகுதியாக இருக்கலாம்” என அவர் பதிவிட்டுள்ளார்.