தான வீட்டில் பங்கேற்றவர்களில் 14 பேருக்கு கொரோனா!

பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தான வீடொன்றில் பங்கேற்றவர்களில் 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கொஸ்லாந்தை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சானக்க மதுரங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குறித்த தான வீட்டில் பங்கேற்ற இரண்டு பெண்களுக்கு முதலில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தான வீட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 14 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் தான வீட்டைச் சேர்ந்த இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர். குறித்த கிராமத்தில் 190 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” – என்றார்.