இணையத்தில் வைரலாகும் ஏலியன் மீன்!

பொதுவாக கடலுக்கு அடியில் ஏராளமான மர்மங்கள் பல புதைத்து கிடக்கிறது. சூழ்நிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரிடரின் போது இதுப்போன்ற மர்மங்கள் வெளிச்சத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது.

மேலும், பல ஆச்சரியமான கடல் வாழ் உயிரினங்களும் வாழ்வதுண்டு, அவற்றையும் நாம் பார்த்து இருப்போம்.

அந்த வகையில், நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக சமீபத்தில் மீனவர் ஒருவர் ரஷ்யாவின் நோர்வே மற்றும் பேரண்ட்ஸ் கடலில் இருந்து மிகவும் விசித்திரமான மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

மேலும், மீனவர் தன் வலையில் சிக்கிய விசித்திர மீனின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த விசித்திர மீன் தான் பேச்சு பொருளாக உள்ளது.

அந்த மீன் வகைகள் ஒரு ஏலியன் போன்று ராட்சத விதமாக அமைந்துள்ளது. அந்த மீனின் பற்கள் அரக்கர்களுக்கு இருப்பது போல் கூர்மையாக இருந்துள்ளது.

விசித்திர மீனை பார்த்த உடன் அதிர்ச்சியில் உறைந்து போன ரோமன் அதன் வயிற்று பகுதியில் குறியீடு ஒன்று இருப்பதையும் பார்த்தார்.

இதனால் இந்த மீனை ஏலியன் மீன் என்று ரோமன் பெயரிட்டுள்ளார். ரோமன் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு ஏராளமானோர் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.