3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் மற்றும் சானிடைசர்களை கொண்டு சாய்பாபாவுக்கு அலங்காரம்

இந்தியாவில் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டி சாய்பாபாவுக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.

கடந்த 4 தினங்களாக சாய்பாபாவுக்கு இந்த விசேஷ அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வேண்டி வழிபட்டனர்.