வவுனியாவில் 45 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்

வவுனியாவில் 45 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.

அதில், வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், காத்தார்சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பறநாட்டாங்கல் பகுதியில் ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

நேரியகுளம் பகுதியில் ஐந்து பேருக்கும், நொச்சிமோட்டை பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஒலுமடு பகுதியில் ஒருவருக்கும், கல்மடு பகுதியில் ஒருவருக்கும், ஆரா நிறுவனத்தில் பணியாற்றும் இருவருக்கும், பெரியஉளுக்குளம் பகுதியில் இருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கோயில்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிநகர் பகுதியில் நான்கு பேருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

கொக்கலிய பகுதியில் இருவருக்கும், ஆனைவிழுந்தான் பகுதியில் இருவருக்கும், கீரிசுட்டான் பகுதியில் ஒருவருக்கும், குளவிசுட்டான் பகுதியில் ஒருவருக்கும், குருந்துவப் பிட்டிய பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஐந்து பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், குடியிருப்பு பகுதியில் ஒருவருக்கும் என 45 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.