உங்கள் ராசிக்கு எந்த செல்லப் பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும்?

செல்லப்பிராணிகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகி விடுவார்கள். ஒரு சிலரைத்தவிர செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பெரும்பாலோனோருக்கு ஆர்வமும், விருப்பமும் அதிகமாக இருக்கும். அதிலும் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்றே கூறலாம்.

அது மட்டுமில்லாமல் ‘லவ் பேர்ட்ஸ்’ எனப்படும் கிளி வகைகளையும் அதிக அளவில் வளர்ப்பதை விரும்புகின்றனர். இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வளர்ப்பதால் நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது ஆன்மீக ரீதியாக கண்டுபிடிக்கபட்ட உண்மை. எந்த ராசிக்காரர்கள்? எந்த வளர்ப்பு பிராணியை வளர்த்தால்! மேலும் அதிர்ஷ்டம் பெருகும் என்பதை இப்பதிவில் காணலாம்.

வளர்ப்பு பிராணிகளுக்கு வீட்டில் இருக்கும் துர் சக்தியை கண்டுபிடிக்கும் ஆற்றல் உண்டு. வீட்டில் இருப்பவர்களை தீய சக்திகளிடமிருந்து முதலில் பாதுகாப்பது செல்லப்பிராணிகள் தான். வீட்டில் தீய சக்திகள் இருந்தால், நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் வீட்டு செல்லப் பிராணி கூட திடீரென இறந்துவிடும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் செல்லப்பிராணி உங்களை மிகப் பெரிய விஷயத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று அர்த்தம்.

பறவைகளை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் வரும் என்று கூறுவார்கள். கிளி, புறா, கோழி போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பதால் வீடு சுபிட்சமாக இருக்கும் என்றும், உங்களுக்கு வர இருக்கும் அதிர்ஷ்டத்தை தடுக்காமல் பாதுகாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறவைகளை நேசிப்பவர்கள் அவற்றை துன்புறுத்துவதில்லை.

இவற்றை நீங்கள் வளர்க்க விரும்பினால் உங்கள் வீட்டை சுற்றி மரங்களையும் வளர்க்க வேண்டும். புதனின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவர் என்று கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் பறவைகளை கூண்டில் அல்லாமல் வெளியில் வைத்து வளர்க்கிறீர்கள் என்றால் நீங்கள் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். உங்களிடம் நல்ல சிந்தனைகளும், செல்வ வளமும் பெருகியிருக்கும்.

குரு மற்றும் சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் நாய்கள் வளர்ப்பதால் நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாய்கள் வளர்ப்பதால் உங்களிடம் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். நாய்கள் வளர்ப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வராது. அவர்களிடம் அதிக அன்பும், அக்கறையும், வெளிப்படையான பேச்சும் கட்டாயம் இருக்கும்.

நாயைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. தன் எஜமானருக்காக இன்னுயிரையும் கொடுக்கும் நன்றியுள்ள ஒரு செல்லப்பிராணியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. உங்களால் நாய் வளர்க்க முடியவில்லை என்றால், நீங்கள் நாய் படத்தையோ அல்லது உருவத்தையோ உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். நாய், பைரவரின் அம்சமாக பார்க்கப்படுவதால் சகல யோகங்களையும் உங்களுக்கு பெற்றுத்தரும்.

மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் சேவல் படத்தை சனி உச்சம் பெற்ற காலத்தில் வீட்டில் வைப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும். முடிந்தவர்கள் சேவலை வீட்டில் வளர்க்கலாம். முடியாதவர்கள் சேவல் உருவ சிறிய சிலையை வேலை செய்யும் இடங்களிலோ, வியாபார தளங்களில் வைத்துக்கொள்ளலாம்.