மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ள இலங்கை !! எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு.!!

கொரோனா அபாய வலங்களில் அரச மற்றும் தனியார் துறையின் அனைத்து சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளை உரிய சுகாதார முறைமைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


நிறுவனங்களை நடத்திச் செல்லும் போது, ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பது சேவைகள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.வீடுகளில் இருந்து பணியாற்றும்போது சில நிறுவனங்கள் விரிவான ஒழுங்கில் சேவைகளை வழங்கியுள்ளன.அவற்றை முன்னெடுத்து மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும், அவற்றுக்கு பதில்களை வழங்குவதற்கும், அதற்கு சட்ட ஏற்பை வழங்குமாறும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், விவசாயம், கட்டட நிர்மாணம் போன்ற அபிவிருத்தி பணிகள் ஏனைய மாவட்டங்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் 11ஆம் திகதி முதல் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் மாவட்டங்களிலும், அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கப்பட முடியும்.