இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திரவ ஒக்சிசனை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

கோவிட் நோயாளிகளின், சுவாச தேவைகளை ஒழுங்குபடுத்தும் முகமாக இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திரவ ஒக்சிசனை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், ஒக்சிசன் கையிருப்பு போதுமானதாக உள்ளது.

எனினும் , எதிர்காலத்தில் கோவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொன்றிலும் 20 தொன் கொள்ளளவு கொண்ட 12 திரவ ஓக்சிசன் கொள்கலன்கள், ஆறு நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் என்று ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை சுமார் 30 சதவீத அறிகுறி நோயாளிகளுக்கு ஒக்சிசன் தேவை என சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.