கல்வியங்காட்டில் கடை மீது வன்முறை குழு அட்டகாசம் !

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி மீது இன்று(12) மாலை 6.41 மணியளவில் இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கல்வியஙகாடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி மீது வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு அங்காடி கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பல்பொருள் அங்காடி உரிமையாளரால் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.