அழிந்து போனதாக கருதப்படும் உலகின் மிகச்சிறிய பச்சோந்தி மீண்டும் கண்டுபிடிப்பு!

அழிந்து போனதாகக் கருதப்படும் உலகின் மிகச்சிறிய பச்சோந்தி தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெறும் ஐந்தரை சென்டிமீட்டர் நீளமே உள்ள இந்த உயிரினம் சாப்மென்ஸ் பிக்மி பச்சோந்தி என அழைக்கப்படுகிறது.

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலாவியில் உள்ள மழைக்காடுகளில் இவை காணப்பட்டன.

 

அந்தவகையில் கடந்த 1992ம் ஆண்டு பார்க்கப்பட்ட இந்தப் பச்சோந்தி அதன் பின் எங்கும் காணப்படவில்லை.

பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் காணப்படும் பிக்மி பச்சோந்தி உலகில் மிக அரிதானது எனவும் மேலும் உலகில் 34 சதவீத பச்சோந்திகள் அரிதானவையாகவும், 18 சதவீத பச்சோந்திகள் அழியும் நிலையிலும் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.