நேற்று உயிரிழந்த பெண்ணினால் கொழும்பில் மேலும் கொரோனா பீதி..!! பலரும் தனிமைப்படுத்தல்..!!

கொரோனா தொற்றினால் நேற்று (5) இலங்கையில் 9வது உயிரிழப்பு நிகழ்ந்தது.மோதரை மெத்சந்தர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 52 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாக சுகவீனம் ஏற்பட்டிருந்தது. கொரொனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டிருந்தது. எனினும், அவர் சிகிச்சையெதுவும் பெற்றுக்கொள்ளவில்லை.ஏப்ரல் 26ஆம் திகதி சுவாசக் கோளாறு ஏற்பட்டு, எலிஹவுஸில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டார். உடல் நிலை மோசமடைந்ததால் மே 2ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.அவருக்கு எப்படி கொரோனா தொற்றியது என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லையென பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி.அந்தப் பெண்ணின் கணவர் பேக்கரி பொருட்களை விற்பனை செய்பவர். அவர் அந்த பகுதியில் பல இடங்களில் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.இறந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தின் 6 உறுப்பினர்களும், அந்த பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற அருகிலுள்ள குடியிருப்பின் ஒன்பது உறுப்பினர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்ட பின்னர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த தனியார் வைத்திசாலையின் 11 ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்று (06)பிசிஆர் பரிசோதனைக்குள்ளாக்கப்படவுள்ளனர். மெத்சந்தர அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 5,000 பேர் வசித்து வருகிறார்கள். ஈ பிரிவில் வசித்து வந்த 1,200 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகும்.