18 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசி இம்மாத இறுதியில் ஆரம்பம்

18 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை இம்மாத இறுதியில் ஏற்றக்கூடியதாக இருக்குமென்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

30 வயதிற்கு மேற்பட்டவர்களுள் 96 வீதமானோருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்திருப்பதாகவும் இவர்களுக்கு ‘இரண்டாவது தடுப்பூசி’ ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் மேலும் பெருந்தொகை தடுப்பூசி நாட்டுக்குக் கிடைக்கவுள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.