கொரோன தொற்றுக்கு உள்ளன பொது சுகாதார பரிசோதகரின் உருக்கமான பதிவு!

முகநூலில் இருந்து கொரோன தொற்றுக்கு உள்ளன பொது சுகாதார பரிசோதகரின் உருக்கமான பதிவு
பொதுமக்களுக்கான விசேட பதிவு : அண்மையில் உரும்பிராயில் இடம்பெற்ற தடுப்புமருந்தேற்றல் நிகழ்விலே நேரகாலம் பார்க்காமல் கடமையாற்றியிருந்தேன்.அது நிறைவுற்றதும் Covid patients -treatment center transfer வேலை இருக்கும்.இவை முடித்து வர இரவு 9.30 மணியாவது ஆகியிருக்கும்.கடினமான அந்த நாட்கள் நிச்சயம் எனது நோயெதிர்ப்பு சக்தியை குறைத்திருக்கும்.

தடுப்பு மருந்தேற்றலில் சேவை ரீதியாக மக்களுடன் அதிகம் Exposure ஆகினேன்.எனினும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க தவறவில்லை.பொதுமக்களை ஒழுங்குபடுத்தலின்போதும், தடுப்பூசி அட்டை வழங்கலின் போதும், தொற்று நீக்கலின் போதும் கொஞ்சம் உத்தியோகத்தன் எனும் நிலை கடந்து தொண்டனாக செயற்பட்டேன்.இதன் போதே தொற்றேட்பட்டிருக்கலாமென ஊகிக்கின்றேன்.
#இரண்டுதடவை #ஊசிபோட்டுவிட்டேன் தானே எனக்கு தொற்றேட்படாது என்ற மிடுக்கு இத்தடவை தோற்றது.
நண்பர்களே தடுப்பூசி போட்டாலும் தொற்று நிச்சயம் ஏற்படும்.ஆனால் பாரதூரமான விளைவு வரை செல்லவிடாது.

இது விளையாட்டான விடயமல்ல நட்புள்ளங்களே.எனக்கு சரியான காய்ச்சல் ஏற்பட்டது.அப்போதே அலுவலகத்தில் விடுமுறையை பெற்றேன்.இரவு 10.30, இரவு 12.30,அதிகாலை 4.30 நேர இடைவெளியில் மூச்சுவிட சிரமப்பட்டேன்.மூச்சு உள்ளே இழுக்க முடியாமல் அவதிப்பட்டேன்.இது 4 நாட்கள் இருந்தது.
4நாட்களாக எதுவுமே மணக்கவில்லை.Typical ஆக Axe oil இனை கூட போத்தலுடன் மூக்கில் வைத்து இழுத்தும் மணக்கவில்லை.

தும்மல் இருந்தது.இருமலும் இருந்தது.மூச்சுக்கஸ்டத்தினை தவிர இதே அறிகுறிகள் மனைவிக்கும் இருந்தது.
எனவே உறுதிப்படுத்தும் நோக்கில் எமது PHI Kuna அண்ணாவுடனும் எமது MOH sir உடனும் கதைத்து சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று Antigen test எடுத்தோம்.சில நிமிடத்திலேயே பொசிட்டிவ் கோடு விழுந்தது.
எந்தவித ஆஸ்துமா பிரச்சினையும் இல்லாத நான் Seretide பம் அடித்தே இரவுகளை போக்கினேன்.
இது தான் விடயம்.இனியும் இந்த கொரணா எங்களை ஒன்றும் பண்ணாது என்று மார்தட்டாதீர்.இதை பகிரக்கூடாது என நினைத்தேன்.முடியலை😢

நான் விடுமுறையில் நின்ற காலத்திலே உரும்பிராயில் 2 கொரோணா இறப்புக்களும், தினமும் 5 நோயாளரும் இனங்காணப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.எனியும் என்ன என்ன கொண்டாட்டங்கள் செய்யவேண்டுமென்பதனை நீங்களே தீர்மானியுங்கள்.கடந்த சில நாட்களாக நோய் நிலைமையால் யாருடைய அழைப்புக்களையும் ஏற்காததற்கு மன்னித்து விடுங்கள்.இனியும் எமது சுகாதார வைத்திய அதிகாரி இலக்கமான 0212231060 இற்கு அழைத்து உங்களுடைய சுகநலன் சார் தேவைகளை பெற்றிடுங்கள்.
கொதிநீராவி தினமும் இருதடவைக்கு மேல் பிடியுங்கள்.விற்றமின் C நிறைந்த பழங்கள்,புரத உணவுகளை எடுங்கள்.

தயவு செய்து அன்பான தொலைபேசி அழைப்புக்களை தவிர்த்திடவும்.
COVID 19 ஓர் சமூகவடுவான (Social stigma) விடயமல்ல.எமது நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.

பொது சுகாதார பரிசோதகர் : Niroopan Natkunarajah