ஒரு சிறிய மிளகில் இத்தனை மருத்துவ குணங்களா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்

மிளகில் ஆயிரக்கணக்கான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சளி, தலைவலி, உடம்பு வலி போன்றவைக்கு 10 மிளகை நறுக்கி கஷாயம் வைத்து குடித்தால் வலிகளெல்லாம் பறந்துவிடும்.

மிளகின் வகைகள்:-

மிளகை வினிகரில் ஊறவைத்து எடுத்தால் சிவப்பு மிளகு என்று அழைக்கிறோம். இந்த மிளகில் கார தன்மை அதிகமாகவே இருக்கும் என்பதால் இதனை மீன் குழம்பு, காரா குழம்பு போன்றவை சமைக்க பயன்படுத்தி கொள்கின்றனர்.

மிளகை வெறும் தண்ணீரில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஊறவைக்கவும். ஊற வைத்த மிளகின் தோல் பகுதி அகன்றுவிடும். பிறகு மிளகாய் வெயிலில் காயவைத்து உலர வைத்தால் வெண் மிளகு தயார்.

கந்தக டை ஆக்சைடுடன் கலக்குதல் மூலம் மிளகு பச்சை நிறமாக மாறுகிறது. இதனை தாய்லாந்தில் சமையல் முறையில் முக்கிய ஒன்றாக கருதுகின்றனர்.

மிளகின் மருத்துவ குணங்கள்:-

  • ஒரு பாத்திரத்தில் வெற்றிலை, சிறிதளவு மிளகு போன்றவை தண்ணீருடன் கொதிக்கவைத்து சூடாக அருந்தினால் தொண்டை புண், தும்பல், மூக்கில் நீர் வழிதல் போன்றவை குணமாக்கும்.
  • மிளகை வறுத்து பொடியாக அரைத்து கொண்டு அதனுடன் உப்பு சேர்த்து தினமும் பல் தேய்த்தால் பற்களில் ஏற்படும் கூச்சத்தன்மை, சொத்தை பற்கள் போன்றவை மாயமாக மறையும்.
  • தினமும் மிளகை உணவில் சேர்த்து கொள்வதால் பொடுகு பிரச்சனை, உடலில் வியர்வையை அதிகமாக சுரக்க வைத்து நச்சு கிரிமிகளை அழிக்க உதவுகிறது.
  • மலச்சிக்கல், செரிமான பிரச்னை, மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலி போன்றவைக்கு கருப்பு மிளகு சிறப்பாக செயல்படுகின்றது.
  • மிளகை தட்டி வாரத்தில் இரண்டு முறை கஷாயம் வைத்து குடித்தால் ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவை நம்மை நெருங்காது.
  • மிளகில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொண்டால் கொரோனா போன்ற கொடிய வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.