பியகம பிரதேசத்தில் 5 நாட்களாக கட்டில் கிடைக்காமையினால் கொவிட் தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

பியகம பிரதேசத்தில் 5 நாட்களாக கட்டில் கிடைக்காமையினால் கொவிட் தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு வாரமாக தனக்கு சுவாசிக்க முடியவில்லை என கூறி சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்திய நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாமல் போனமையினால் நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் எஸ்.டீ.யூ.டீ.குலதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையின் உண்மையான தன்மையை புரிந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் மாத்திரம் பியகம பிரதேசத்தில் தங்களுக்கு தெரியப்படுத்திய 3 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மரணங்களின் நேரடி எதிர்ப்பு சுகாதார பரிசோதகர்கள் மீதே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.