தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பில் வெளியான தகவல்

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாக்கள் உள் வீதியில் மட்டுமே நடைபெறவுள்ளன.

மகோற்சவ காலங்களில் உபயகாரர்கள் மட்டுமே ஆலயத்தினுள் அனுமதிக்கப்பட்டு , துர்க்கை அம்மன் உள் வீதியுலா மட்டுமே வலம் வரவுள்ளார்.

ஆலய சூழலில் காவடிகள் , அங்க பிரதிஷ்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வியாபர நிலையங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அடியவர்களும் வீடுகளில் இருந்து அம்மனை வழிபடுமாறும் , மகோற்சவம் மிக அமைதியாக நடைபெறுவதற்கு ஒத்துழைக்குமாறும் ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.