பயணக்கட்டுப்பாடு தொடர்பில் வெளிவந்த தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதன் பின்னர் நாட்டை முடக்குவது அல்லது பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது இன்றோ அல்லது நாளையோ சாத்தியமாகலாம் என்று தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நூறிற்கும் அதிகமாகவுள்ளதை சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த சில வாரங்களில் பெரும் நெருக்கடி நிலையினை எதிர் கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளார்கள்.

இதனையடுத்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இன்றோ அல்லது நாளையோ பயணக்கட்டுப்பாடு தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உலகம் முழுவதும் டெல்டாவின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் பல நாடுகள் முடக்க நிலையினையும் பயணக்கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.