மாத்திரைகளுக்கு நடுவில் கோடு இருப்பதற்கான காரணம் தெரியுமா?

நீங்கள் சாப்பிடக்கூடிய மாத்திரை 100 mg என்ற கணக்கில் இருந்தால், கோடு போட்ட மாத்திரையில் 50mg வலப்பக்கமும் 50mg இடப்பக்கமும் இருக்கும். இந்த கோடுபோட்ட மாத்திரைகளை தான் Adjustable tablet என்று சொல்லுவார்கள்.

இப்படி கோடு போட்ட மாத்திரையை தான் பாதியாக உடைத்து நாம் சாப்பிட வேண்டும். கோடு போடாத மாத்திரைகளை நம்மால் உடைத்து சரியான கணக்கில் சாப்பிட முடியாது. சாப்பிடவும் கூடாது. கோடு போடாத மாத்திரைகளை உடைத்து சாப்பிடுவது அவ்வளவு சரியான முறை அல்ல. இதற்காகத்தான் மாத்திரைகளில் நடுவே கோடு போடப்பட்டுள்ளது.

நாம் சாப்பிடும் மாத்திரை வகைகளில் capsule வகையான மாத்திரைகள் உண்டு. கேப்சூல் என்று மாத்திரையின் மேலே போடப்படும் கவர், ஜெலட்டின் ஆல் செய்யப்பட்டது. இந்த capsule மாத்திரைகளிலும் இரண்டு வகை உண்டு. பிளாஸ்டிகில் இருக்கக்கூடிய capsule, ரப்பர் வகையில் இருக்கக்கூடிய capsule, இரண்டுமே ஜெலட்டின் வகைதான்.

ஆனால் பிளாஸ்டிக் வகைகளில் பவுடர் போன்ற மருந்து வகைகள் அடைக்கப்பட்டிருக்கும். அதாவது மேலே ஒரு capsule மூடி, கீழே ஒரு capsule மூடி போட்டு உள்ளே மருந்து பவுடரை வைத்து இருப்பார்கள். ரப்பர் போன்ற கேப்ஸ்யூல் உள்ளே மருந்து அடைக்கப்பட்டிருக்கும். ஏன், இந்த மருந்துகளை மாத்திரையாகவே தயாரித்து கொடுக்க கூடாது? ஏன் capsule போட்டு கொடுக்கின்றார்கள்?

இதற்கும் காரணம் உண்டு. மாத்திரைகள் நம் உடலுக்குள் சென்று கரைந்து வேலை செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் கேப்ஸ்யூல் அப்படி கிடையாது. நம் வயிற்றுக்குள் சென்ற உடனேயே கரைந்து தனது வேலையைத் தொடங்கி விடும். உடலுக்கு சென்று உடனடியாக வேலை செய்ய வேண்டும் என்ற மருந்து வகைகளை capsule ஆகத்தான் கொடுப்பார்களாம்.