யாழ் பண்ணையில் செல்பி”யால் வந்த வினை! சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று மாலை காணாமல் போன குடும்பஸ்தர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணியாற்றும் இவர், நேற்று மாலை தனது நண்பர்களுடன் பண்ணை இரண்டாம் பாலத்தில் ஏறிநின்று செல்பி எடுக்க முயன்ற வேளையில் நீராட்டப் பாலத்தில் இருந்து தவறி கடலில் வீழந்துள்ளார்.

காணாமல் போன இவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியைச் சேர்ந்த கௌதமன்  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் திருமணம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.