இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பில் வெளிவந்த தகவல்

இலங்கையின் இன்றைய வானிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, தெற்கு, வடமேற்கு மற்றும் வட-மத்திய மாகாணங்கள் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வானிலை மையம் கோரியுள்ளது.