பருப்பு மற்றும் சீனியின் விலைகள் அதிகரிப்பு!

தேசிய வர்த்தக சந்தையில் மைசூர் பருப்பு மற்றும் சீனியின் மொத்த விற்பனை விலைகள் ஒரு வாரத்தில் 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் ஒரு கிலோ கிராம் மைசூர் பருப்பு 155 ரூபாயாக இருந்ததுடன் நேற்றைய அதன் விலை 165 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன் பருப்பின் மொத்த விற்பனை விலை 170 வரை அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ பருப்பை 220 ரூபாவுக்காவது விற்பனை செய்ய வேண்டும் என சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 125 ரூபாயாக காணப்பட்டதுடன் நேற்றைய தினம் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டதல், அதன் மொத்த விற்பனை விலையானது 142 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

காணப்படும் நிலைமையில் ஒரு கிலோ கிராம் சீனியினை 155 ரூபாவுக்காவது விற்பனை செய்ய வேண்டும் என சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் காணப்படும் தேவைக்கு ஏற்ப மைசூர் பருப்பு மற்றும் சீனி கையிருப்பில் இல்லாத காரணத்தினால் மொத்த விற்பனையாளர்கள் விலைகளை அதிகரித்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.