இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை

தற்போதைய நிலையில் பிள்ளைகளை வெளியே அழைத்து செல்ல வேண்டாம் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.மருத்துவ தேவைக்காக வைத்தியசாலைக்கு பிள்ளைகளை அழைத்து செல்வதனை தவிர்த்து வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் பிள்ளைகளை சமூகத்திற்குள் அழைத்து செல்ல வேண்டாம் என வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சன்ன பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.

முடிந்தளவு பிள்ளைகளை வீட்டிலேயே வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிள்ளைகளுக்கு 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரையில் பிள்ளைகள் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கும் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாள் ஒன்றுக்கு 12 – 15 வரையில் சிறுவர்கள் கொவிட் தொற்றுடன் அனுமதிக்கப்படுகின்றார்கள். வைத்தியசாலை அதனை திறனை எட்டியுள்ளது. இதனால் பெற்றோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.