பதுளையில் உள்ள பிரபல தமிழ் மகளிர் பாடசாலையில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி பலி

பதுளையில் உள்ள பிரபல தமிழ் மகளிர் பாடசாலையில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பதுளையில் உள்ள பொது மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விடயத்தை மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

49 அகவையை கொண்ட இந்த ஆசிரியை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பதுளை யம்பனாவத்தையில் வசிக்கும் அவர், விரைவான என்டிஜென் சோதனையின்போது தொற்றாளியாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.