திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து வெளிவந்த முக்கிய தகவல்

அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து விசேட அறிவுறுத்தலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரும் வகையிலான திருமண மண்டபமொன்றில் 150 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 500ற்கு குறைவானோர் அமரும் வகையிலான திருமண மண்டபத்தில் 100 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.