நாட்டை முடக்கப்போவதில்லை அரசாங்கம் அறிவிப்பு

நாட்டில் நிலவி வரும் கோவிட் – 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் சில கட்டுப்பாடுகள் விதிக்க தீரமானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என கொவிட்19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.