சற்றுமுன்னர் சித்தங்கேணி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிள் ஒன்றும் கப் ரக வாகனம் ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்குக் கால் முறிந்துள்ள நிலையில் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.